News March 11, 2025

மனைவியை எரித்து கொன்ற கணவன் உயிரிழப்பு

image

வெம்பக்கோட்டை அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் பொன்னுசாமி கடந்த 5ம் தேதி மனைவி முனிஸ்வரியை பெட்ரோல் ஊற்றி எரித்தார். அப்போது, பொன்னுசாமிக்கு தீக்காயம் ஏற்பட்டது. மனைவி தற்கொலை செய்து கொண்டதாக பொன்னுசாமி நாடகமாடியது போலீஸார் விசாரணையில், தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்; இந்நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொன்னுச்சாமி நேற்று உயிரிழந்தார்.

Similar News

News October 31, 2025

மேம்பாலம் திறப்பு விழா குறித்து எம்.எல்.ஏ அறிவிப்பு

image

சிவகாசியில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து எம்எல்ஏ அசோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மேம்பாலத்தில் மின்விளக்கு பொருத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளதுடன் பாலத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் தனியார் பங்களிப்புடன் மின் விளக்குகள், நீரூற்று பொருத்தப்பட உள்ளது.
பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

News October 30, 2025

விருதுநகரில் இலவச முழுமாதிரி தேர்வுகள்

image

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் – 3644 பணிக்காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவ.9 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு இலவச முழுமாதிரித் தேர்வுகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நவ.01 அன்று நடைபெற உள்ளதாக ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News October 30, 2025

விருதுநகர்: PHONE தொலைந்தால் நோ டென்ஷன்., இதோ தீர்வு

image

விருதுநகர் மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையதளத்தை கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!