News March 11, 2025
புதிய உச்சத்தில் கோதுமை உற்பத்தி

நடப்பாண்டில், இந்தியாவின் கோதுமை உற்பத்தி புதிய உச்சமாக 11.54 கோடி டன்னாக இருக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது அரசின் இலக்கான 11.50 கோடி டன்னை விட அதிகமாகும். 2024-25ஆம் ஆண்டில் காரீப், ராபி பருவ மொத்த உணவு தானியங்கள் உற்பத்தி 5% அதிகரித்து, 33.09 கோடி டன்னாக இருக்கும். இதில் காரிப் பயிர்கள் 16.64 கோடி டன்னாகவும், ராபி பயிர்கள் 16.45 கோடி டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News March 12, 2025
ராசி பலன்கள் (12.03.2025)

➤மேஷம் – நன்மை ➤ரிஷபம் – ஓய்வு ➤மிதுனம் – நிறைவு ➤கடகம் – பாராட்டு ➤ சிம்மம் – நலம் ➤கன்னி – இன்பம் ➤துலாம் – அசதி ➤விருச்சிகம் – பக்தி ➤தனுசு – லாபம் ➤மகரம் – ஆக்கம் ➤கும்பம் – தனம் ➤மீனம் – களிப்பு.
News March 12, 2025
23 லட்சம் வேலை வாய்ப்பு… AI துறையில் ஜாக்பாட்..!

வரும் 2027இல் AI துறையில் 23 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என Bain and Company நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த துறையில் வேலைவாய்ப்பு 1.5 – 2 மடங்கு உயரும் எனவும், 2019 முதல் ஆண்டுதோறும் AI தொடர்பான வேலைவாய்ப்புகளும், ஊதியமும் 21% அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஆஸி. போன்ற நாடுகளில் AI பணியாளர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.
News March 12, 2025
அரசுப் பஸ்களில் இனி கண்டக்டர் வேலை இல்லை

அரசுப் பஸ்களில் இதுவரை டிரைவர்கள், கண்டக்டர்கள் என தனித்தனி ஆட்தேர்வு நடைபெற்றது. இனி நிரந்தர பணிக்கு கண்டக்டர் என தனியாக ஆட்தேர்வு செய்வதில்லை என அரசு முடிவெடுத்துள்ளது. டிரைவர், கண்டக்டர் ஆகிய 2 உரிமங்கள் வைத்திருப்போரையே தேர்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. எஸ்இடிசியில் 300 கி.மீ. தூரத்துக்கு மேல் செல்லும் பஸ்களில் இம்முறை ஏற்கெனவே உள்ளது. இனி மாநகரப் பேருந்துகளிலும் இது அமலாகவுள்ளது.