News March 11, 2025
நடிகையுடன் டேட்டிங் சென்ற கில்?

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுப்மன் கில்லும், தொலைக்காட்சி நடிகை அவ்னீத் கவுரும் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவி வருகின்றன. CTல் IND vs AUSக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் அவ்னீத் கலந்துகொண்டதை அடுத்து, இந்த சந்தேகம் வலுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, கடந்த காலங்களில் கில் மற்றும் அவ்னீத் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை, நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
Similar News
News March 12, 2025
இரவில் மழை கொட்டப் போகுது

தமிழகத்தில் இன்றிரவு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
News March 11, 2025
NO.1 தமிழ்நாடு தான்: ₹1 லட்சம் கோடி கடன்

2023-24 நிதியாண்டில் தமிழ்நாடு ₹1.13 லட்சம் கோடியை திறந்தவெளி சந்தையில் கடன் வாங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல், 2024-25 நிதியாண்டில் ₹1.01 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாகவும், நாட்டிலேயே தமிழ்நாடு தான் அதிகம் கடன் வாங்கிய மாநிலமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பட்டியலில் திரிபுரா மாநிலம் மட்டும் ஒரு பைசா கூட கடன் வாங்கவில்லை.
News March 11, 2025
விஜய் இதை செய்ய வேண்டும்… ஹுசைனியின் கடைசி ஆசை

விஜய்யின் பத்ரி படம் மூலம் பிரபலமானவர் கராத்தே மாஸ்டர் ஹுசைனி. தற்போது ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், தான் கராத்தே கற்றுக் கொடுக்கும் இடத்தை விற்க முடிவு செய்துள்ளார். பவன் கல்யாண் அங்கு கராத்தே கற்றதால் அந்த இடத்தை அவர் வாங்க வேண்டும் என ஹுசைனி விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல், விஜய் வீட்டுக்கொரு வில்வித்தை வீரரை உருவாக்க வேண்டும் என்றும் ஹுசைனி கோரிக்கை விடுத்துள்ளார்.