News March 11, 2025

‘விஜய் ஆண்டனி 25’ டீசர் அப்டேட்

image

விஜய் ஆண்டனியின் 25ஆவது படமான ‘சக்தித் திருமகன்’ படத்தின் டீசர், வரும் 12ஆம் தேதி மாலை 5.01க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ‘அருவி’, ‘வாழ்’ படங்களை இயக்கிய அருண் பிரபு இப்படத்தை இயக்குகிறார். நாயகியாக நடிகை திருப்தி நடிப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் இப்படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 12, 2025

இரவில் மழை கொட்டப் போகுது

image

தமிழகத்தில் இன்றிரவு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News March 11, 2025

NO.1 தமிழ்நாடு தான்: ₹1 லட்சம் கோடி கடன்

image

2023-24 நிதியாண்டில் தமிழ்நாடு ₹1.13 லட்சம் கோடியை திறந்தவெளி சந்தையில் கடன் வாங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல், 2024-25 நிதியாண்டில் ₹1.01 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாகவும், நாட்டிலேயே தமிழ்நாடு தான் அதிகம் கடன் வாங்கிய மாநிலமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பட்டியலில் திரிபுரா மாநிலம் மட்டும் ஒரு பைசா கூட கடன் வாங்கவில்லை.

News March 11, 2025

விஜய் இதை செய்ய வேண்டும்… ஹுசைனியின் கடைசி ஆசை

image

விஜய்யின் பத்ரி படம் மூலம் பிரபலமானவர் கராத்தே மாஸ்டர் ஹுசைனி. தற்போது ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், தான் கராத்தே கற்றுக் கொடுக்கும் இடத்தை விற்க முடிவு செய்துள்ளார். பவன் கல்யாண் அங்கு கராத்தே கற்றதால் அந்த இடத்தை அவர் வாங்க வேண்டும் என ஹுசைனி விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல், விஜய் வீட்டுக்கொரு வில்வித்தை வீரரை உருவாக்க வேண்டும் என்றும் ஹுசைனி கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!