News March 11, 2025

தனியார் பள்ளிகளில் மும்மொழி இல்லையா? தமிழிசை கேள்வி

image

அரசுப் பள்ளி குழந்தைகளை வஞ்சித்து, தமிழக அரசு அரசியலை முன்னெடுத்துச் செல்வதாக தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். தனியார் பள்ளி பிள்ளைகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளி பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை என்ற உண்மையை உங்களால் மறுக்க முடியுமா? என CM ஸ்டாலினுக்கு அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தனியார் பள்ளிகளில் மும்மொழி கற்பிக்கப்படவில்லை என்று கூற முடியுமா? எனவும் அவர் வினவினார்.

Similar News

News March 11, 2025

கயாடு காட்டில் மழை… குவியும் புதுப்பட வாய்ப்புகள்!

image

டிராகன் பட வெற்றியைத் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருப்பவர் கயாடு லோஹர். படத்தின் கதாநாயகியான அவரது துள்ளலான நடிப்பை இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், புதிய பட வாய்ப்புகள் கயாடுவின் கதவைத் தட்ட தொடங்கியுள்ளன. இதயம் முரளி படத்தில் நடித்துவரும் அவர், நிலா வரும் வேளை, ஃபங்கி, தாரம் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். இதுதான் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வதோ!

News March 11, 2025

மொரீஷியஸ் நாட்டின் உயரிய விருது PM மோடிக்கு அறிவிப்பு!

image

PM மோடி 2 நாள்கள் அரசுப் பயணமாக மொரீஷியஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். நாளை நடைபெறும் அந்நாட்டின் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்கிறார். இந்நிலையில், மொரீஷியஸ் நாட்டின் உயரிய விருதான, Grand Commander of the Order of the Star and Key of the Indian Ocean என்ற விருது மோடிக்கு வழங்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த விருதை பெறும் முதல் இந்தியர் PM மோடிதான்.

News March 11, 2025

கடுமையாக பாதிக்கப்பட்ட LIC முதலீடு

image

நாம் செலுத்தும் ப்ரீமியம் தொகையினை LIC வேறு நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. அதில் கிடைக்கும் லாபத்தை வைத்துதான் நம்முடைய மெச்சூரிட்டி தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், LICயின் முதலீடு இன்று கடும் சரிவினை சந்தித்திருக்கிறது. IndusInd வங்கியின் பங்கு மதிப்பு இன்று 27% சரிந்த நிலையில், அதில் அதிக முதலீடு செய்திருப்பது LICதான். அவ்வங்கியின் மொத்த மதிப்பில் 5.2 சதவீதத்தை LIC வைத்திருக்கிறது.

error: Content is protected !!