News March 11, 2025
இந்த கார் தயாரிப்பை நிறுத்தும் மாருதி சுசூகி?

மாருதி சுசூகி தனது செடான் மாடலான CIAZ கார் தயாரிப்பை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2014ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காரின் விற்பனை சரிந்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 7,726 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. மறுபுறம், ஹோண்டா சிட்டி, விர்டஸ், வெர்னா போன்ற போட்டியாளர்களிடமிருந்து அதிகரித்து வரும் போட்டி காரணமாக, CIAZ-ன் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்ததாகத் தெரிகிறது.
Similar News
News March 11, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 11, 2025
நாடாளுமன்ற அமர்வுகள் 13ஆம் தேதி ரத்து

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் வருகிற 14ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் அடிப்படையில் அன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 13ஆம் தேதியும் 2 அவைகளிலும் அமர்வுகளையும் ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக மக்களவை வருகிற 29ஆம் தேதி செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 11, 2025
கிரிக்கெட் ரசிகர்களுக்கு மொட்டை அடித்த போலீஸ்

ம.பி.யின் தேவாஸில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மொட்டை அடித்து ஊர்வலமாக போலீஸ் அழைத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. CT கோப்பையை இந்தியா வென்றதை பட்டாசு வெடித்து இளைஞர்கள் அபாயகரமான முறையில் கொண்டாடினர். அதை தடுத்த போலீசிடம் சிலர் தகாத முறையில் நடந்த வீடியோ பதிவை வைத்து, 9 பேரை பிடித்து, மொட்டை அடித்து முக்கிய வீதிகள் வழியே அழைத்து சென்றதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.