News March 10, 2025
மூடநம்பிக்கையின் உச்சம்… பூனையை எரித்த கொடூரம்!

உ.பி. மாநிலம் மொரதாபாத்தில் பெண் ஒருவர் வெளியே புறப்பட்டபோது காட்டுப் பூனை குறுக்கே சென்றதாம். இதனை அபசகுணமாக எண்ணிய அவர், நண்பர்கள் உதவியுடன் அந்த பூனையை பிடித்து உயிரோடு எரித்துள்ளார். இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து, பூனையை கொன்றதாக பெண், அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரித்து வருகிறது.
Similar News
News July 9, 2025
ஜெ. தம்பியாக நான் அரசியல் செய்தவன்: திருமாவளவன்

அதிமுக தோழமை கட்சி என்பதால்தான் கூட்டணி குறித்து விமர்சிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுக- பாஜக ஒரு பொருந்தா கூட்டணி என திருமா கூறியதற்கு, ‘எங்கள் கூட்டணி பற்றிக் கூற அவர் யார்?’ என்று இபிஎஸ் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், அதற்கு பதிலளித்த திருமா, பாஜகவால் ADMK பாதிக்கப்படக்கூடாது என்றார். மேலும், தான் ஜெயலலிதாவின் தம்பியாக அரசியல் செய்தவன் என்பது அதிமுகவினருக்கே தெரியும் என்றார்.
News July 9, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹480 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 9) சவரனுக்கு ₹480 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,000-க்கும், சவரன் ₹72,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹120-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,20,000-க்கும் விற்பனையாகிறது.
News July 9, 2025
ரஷ்ய அமைச்சர் தற்கொலை.. விசாரணைக்கு பயந்தாரா?

ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் Roman V. Starovoyt தற்கொலை செய்தது குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சராகும் முன்பு குர்ஸ்க் பிராந்திய ஆளுநராக அவர் பதவி வகித்தார். இந்நிலையில் அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்துள்ளார். குர்ஸ்க் பிராந்தியத்தில் நடந்த நிதிமுறைகேடு குறித்து விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.