News March 10, 2025
CT கோப்பையுடன் இந்திய வீரர்கள் பேரணியா?

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற IND வீரர்கள் மும்பையில் கோப்பையுடன் பஸ் பேரணி சென்றனர். அவர்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல், CT கோப்பையுடன் இந்திய வீரர்கள் பேரணி செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், துபாயில் இருந்து வீரர்கள் தனித்தனியாக அவர்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வதாக கூறப்படுகிறது. அதனால், பஸ் பேரணிக்கு வாய்ப்பில்லையாம்.
Similar News
News August 14, 2025
BP நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகள்

இதய ஆரோக்கியம் காக்கவும், உயர் ரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் இந்த உணவுகள் உதவும்: *ஆரஞ்சு, எலுமிச்சை, கிரேப் ஃப்ரூட் உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள் *ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த மீன்கள் *பூசணி விதை *நெல்லி உள்ளிட்ட பெர்ரி வகை பழங்கள் *பிஸ்தா, பூண்டு, கேரட், செலரி, தக்காளி, பிரக்கோலி, சியா விதைகள், பீட்ரூட், ஸ்பினாச் (பசலைக் கீரை) *வாழைப்பழம் *பால், தயிர் உள்ளிட்ட கால்சியம் நிறைந்த உணவுகள் *முழு தானியங்கள்.
News August 14, 2025
உறுப்பினரை சேர்க்க பிச்சை எடுக்கும் திமுக: EPS சாடல்

ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது புகார் பெட்டியில் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது என EPS கேள்வி எழுப்பியுள்ளார். ஆம்பூரில் பேசிய அவர், 45 நாள்களில் பிரச்னைகளுக்கு தீர்வு என கூறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மக்களை ஏமாற்றும் வேலை எனவும், இதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என்றார். மேலும், உறுப்பினர்களை சேர்க்கவே பிச்சை எடுக்கும் ஆட்சி தொடர வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பினார். உங்கள் கருத்து?
News August 14, 2025
₹3,000 டோல்கேட் FAStag பாஸ் நாளை அமலுக்கு வருகிறது

நாடு முழுவதும் ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி பயணம் செய்யும் FAStag திட்டம் நாளை அமலுக்கு வருகிறது. இதன் மூலம் வணிக நோக்கமற்ற கார், ஜீப், வேன்கள் நாடு முழுவதும் 200 முறை டோல்கேட்களில் கட்டணமின்றி செய்ய முடியும். Rajmarg Yatra செயலியில் PASS வழங்கும் பணி தொடங்கியுள்ளது. பொதுமக்கள் தங்களது செல்போன் எண், வாகன பதிவு எண், பாஸ்டேக் ஐடி உள்ளிட்டவற்றை பதிவு செய்து ரசீதை பெற்றுக் கொள்ளலாம். SHARE IT.