News March 10, 2025

தூத்துக்குடி மக்களே 2 நாட்கள் கவனமாக இருங்கள்

image

தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் “இன்றும் (11) நாளையும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது; எனவே இந்த 2 நாட்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்ல வேண்டாம்; நீர்நிலைகள் அருகே தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்; மேலும் மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News August 24, 2025

திருச்செந்தூர் அருகே கடைக்குள் புகுந்த கார்

image

கடலூரை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்று திருச்செந்தூர் – தூத்துக்குடி சாலையில் ஆறுமுகநேரி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாரையோரத்தில் இருந்த மரத்தில் மோதி அருகே இருந்த பூக்கடைக்குள் புகுந்தது. இதில் அங்கு நின்று கொண்டிருந்த லட்சுமணன் என்பவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 24, 2025

தூத்துக்குடி : ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி?

image

தூத்துக்குடி மக்களே புதிதாக வீடு (அ) நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இம்முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News August 24, 2025

தூத்துக்குடியில் இலவச வக்கீல் சேவை! SAVE பண்ணிக்கோங்க

image

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாக சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️தூத்துக்குடி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0461-2335111 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!