News March 10, 2025
BREAKING: X தளம் மீண்டும் முடங்கியது

உலகம் முழுவதும் X தளம் முடங்கியுள்ளதால் பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கோடி பேர் பயன்படுத்தும் குறுஞ்செய்தி தளமான X, தகவல் பரிமாற்றத்திற்காக பயன்பட்டு வருகிறது. இன்று மதியம் அது சில நிமிடங்கள் முடங்கிய நிலையில், தற்போது மீண்டும் முடங்கியிருக்கிறது. செய்தி பரிமாற்றத்தின் முக்கிய தளமாக இருக்கும் X முடங்கியிருப்பது தகவல் பரிமாற்றத்தை பாதித்துள்ளது.
Similar News
News March 11, 2025
IPL: லக்னோ அணிக்கு பெரும் அதிர்ச்சி!

IPL 2025 தொடங்குவதற்கு முன்பே லக்னோ அணிக்கு அதிர்ச்சி கிடைத்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் காயம் காரணமாக இந்த சீசனில் முதல் அணியில் இடம் பெறமாட்டார் எனக் கூறப்படுகிறது. கடந்த சீசனில் கவனம் ஈர்த்த அவரை, ஏலத்தில் ₹11 கோடிக்கு LSG தக்க வைத்தது. மயங்க் மணிக்கு 150KM வேகத்தில் பந்து வீசுவதில் புகழ் பெற்றவர். LSG தனது முதல் போட்டியை டெல்லி அணியுடன் மார்ச் 24ம் தேதி விளையாடுகிறது.
News March 11, 2025
தனியார் பள்ளிகளில் மும்மொழி இல்லையா? தமிழிசை கேள்வி

அரசுப் பள்ளி குழந்தைகளை வஞ்சித்து, தமிழக அரசு அரசியலை முன்னெடுத்துச் செல்வதாக தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். தனியார் பள்ளி பிள்ளைகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளி பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை என்ற உண்மையை உங்களால் மறுக்க முடியுமா? என CM ஸ்டாலினுக்கு அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தனியார் பள்ளிகளில் மும்மொழி கற்பிக்கப்படவில்லை என்று கூற முடியுமா? எனவும் அவர் வினவினார்.
News March 11, 2025
இந்த கார் தயாரிப்பை நிறுத்தும் மாருதி சுசூகி?

மாருதி சுசூகி தனது செடான் மாடலான CIAZ கார் தயாரிப்பை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2014ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காரின் விற்பனை சரிந்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 7,726 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. மறுபுறம், ஹோண்டா சிட்டி, விர்டஸ், வெர்னா போன்ற போட்டியாளர்களிடமிருந்து அதிகரித்து வரும் போட்டி காரணமாக, CIAZ-ன் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்ததாகத் தெரிகிறது.