News March 31, 2024

BREAKING: ஜாபர் சாதிக் வழக்கில் அமீருக்கு சம்மன்

image

வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய விவகாரத்தில், மூளையாகச் செயல்பட்ட ஜாஃபர் சாதிக் கைதாகி சிறையில் உள்ளார். இவ்வழக்கில் இயக்குநர் அமீருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில், வரும் 2ம் தேதி ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக் தயாரிக்கும் படத்தை அமீர் இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 1, 2025

நீடா அம்பானியின் விலையுயர்ந்த பொருட்கள்

image

ரிலையன்ஸ் அறக்கட்டளைத் தலைவர் நீடா அம்பானி, தனது தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலால் பலருக்கும் முன்மாதிரியாக உள்ளார். கல்வி, கலை, விளையாட்டு துறைகளில் பெரும் பங்களிப்பு செய்து வருகிறார். சமூக நலப்பணிகளிலும் ஆர்வமுடன் ஈடுபடுகிறார். இன்று அவரின் பிறந்தநாள். இவர் பயன்படுத்தும் விலையுயர்ந்த சொகுசு பொருட்களின் படங்களை மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.

News November 1, 2025

நகை கடன்… HAPPY NEWS

image

தங்கம் விலை உயர்ந்து வருவதையொட்டி, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் தொகை, கிராமுக்கு 7,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக, 1 கிராம் தங்கத்துக்கு ₹6,000 மட்டுமே கடனாக வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தங்கத்தை வங்கிகளில் அடகு வைக்கும் முன், பொதுமக்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை அறிய <<17712760>>இங்கே<<>> கிளிக் செய்யவும். SHARE IT.

News November 1, 2025

50 விநாடி விளம்பரத்திற்கு ₹5 கோடி சம்பளம்

image

50 விநாடிகள் ஓடும் டாடா ஸ்கை விளம்பரத்தில் நடிக்க, நயன்தாரா ₹5 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் நடிக்க ₹10 – ₹15 கோடி சம்பளம் பெறும் நிலையில், விளம்பரத்தில் நடிக்க அவர் வாங்கும் சம்பளம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையான நயன்தாராவின் கைவசம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிப்படங்கள் உள்ளன.

error: Content is protected !!