News March 10, 2025

கோடைக்கால அட்டவணையை வெளியிட்ட சேலம் விமான நிலையம்

image

சேலம் காமலாபுரத்தில் இருந்து சென்னை, கொச்சின், பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், கோடைக்கால பயண நேர அட்டவணையை சேலம் விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வரும் மார்ச் 30 முதல் கோடைக்கால அட்டவணை அமலுக்கு வருகிறது. இண்டிகோ ஏர்லைன்ஸ், அலையன்ஸ் ஏர் விமான நிறுவனங்கள் விமான சேவையை வழங்கி வருகின்றனர்.

Similar News

News September 11, 2025

சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு!

image

ரயில்வே தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக செப்.12- ஆம் தேதி அன்று மட்டும் போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (66616), மேட்டுப்பாளையம் – கோவை மெமு ரயில் (66617) முற்றிலும் ரத்துச் செய்வதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் (16843) மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் கோவை ரயில் நிலையங்களில் நிற்காது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News September 11, 2025

சேலம்: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

image

சேலம் மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <>இங்கே கிளிக்<<>> செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News September 11, 2025

சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு!

image

பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை செப்.12- ல் ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (16845) கரூரில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும்; செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (16846) செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு கரூர் செல்லும். இந்த ரயில்கள் ஈரோடு- கரூர் இடையே இயக்கப்படமாட்டாது என, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!