News March 10, 2025
CT2025 சிறந்த அணி இதுதான்

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடியோரைக் கொண்டு புதிய அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அதில், ரச்சின் ரவீந்திரா, இப்ராஹிம் சத்ரான், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் (WK), க்ளென் பிலிப்ஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், மிட்ச்செல் சாண்ட்னர் (C), முகமது ஷமி, மேட் ஹென்ரி, வருண் சக்ரவர்த்தி, அக்ஷர் பட்டேல் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். உங்கள் பேவரைட் யார்?
Similar News
News July 9, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்!

நேற்று மாலை ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று(ஜூலை 9) சரிவுடன் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 145 புள்ளிகள் சரிந்து 83,569 புள்ளிகளிலும், நிஃப்டி 30 புள்ளிகள் சரிந்து 25,492 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Wipro, Tata Steel, ICICI Bank, HCL Tech உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சற்று சரிவைக் கண்டுள்ளன.
News July 9, 2025
மக்கள் விரோத ஆட்சியை விரட்டும் புயல் இபிஎஸ்: வானதி

தமிழகத்தில் நடந்து வருவது தேச விரோத மற்றும் மக்கள் விரோத ஆட்சி என வானதி சீனிவாசன் சாடியுள்ளார். கோவையில் பேசிய அவர், இந்த ஆட்சியில் தொழில்துறையினர் மிகுந்த வேதனையில் உள்ளதாகவும், ஓரணியில் இருந்து திமுக ஆட்சியை விரட்டுவோம் என்றார். மேலும், தமிழகத்தில் நேற்று தான் புயல் மையம் கொண்டது எனவும், இன்று சூறாவளியாக சுழன்று கொண்டிருப்பதாகவும் இபிஎஸ்-ன் சுற்றுப் பயணம் குறித்து விளக்கம் அளித்தார்.
News July 9, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹480 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 9) சவரனுக்கு ₹480 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,000-க்கும், சவரன் ₹72,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹120-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,20,000-க்கும் விற்பனையாகிறது.