News March 10, 2025

சேலம் வந்த பிரபல இயக்குனர் 

image

சேலம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தில் உள்ள அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயிலில் இன்று (மார்ச்.10) பா.ம.க. பிரமுகர் தமிழ்செல்வன்- சந்திரலேகா ஜோடி திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் பா.ம.க. பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Similar News

News September 11, 2025

சேலம்: நடுரோட்டில் பீர் பாட்டில் சண்டை!

image

வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி (38). வாழப்பாடி அய்யாகவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (37). இருவரும், புதுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடை முன், நேற்று இரவு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பீர் பாட்டிலால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு குத்திக்கொண்டனர். இதுகுறித்து தகவலின் பேரில் அப்பகுதிக்குச் சென்ற வாழப்பாடி போலீசார், இருவரையும் மீட்டு, விசாரிக்கின்றனர்.

News September 11, 2025

சேலம் செப்டம்பர் 11 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலத்தில் செப்.11 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 9 மணி முண்டாசு கவி மகாகவி பாரதியாரின் நினைவு நாள் டவுன் ரயில் நிலையம் அருகில் இருக்கும் பாரதியார் சிலைக்கு பல தரப்பினர் மாலை அணிவித்தல் ▶️காலை 10 மணி சேலம் அரசு சட்டக் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு அரசு நிகழ்ச்சி ▶️காலை 10 மணி பெரியார் பல்கலைக்கழகத்தில் விளைவு சார் கல்வி பயிற்சி பட்டறை

News September 11, 2025

சேலத்தில் வேலை தேடுபவரா நீங்கள்?

image

சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸில் உள்ள G.V.N. மஹாலில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.செப்.20- ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் 100- க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.இதில் 8ஆம் வகுப்ப்பு முதல் டிகிரி, டிப்ளமோ,BE,B.TECH அல்லது ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். வேலை தேடும் இளைஞர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க

error: Content is protected !!