News March 31, 2024
காங்கிரசிடம் மேலும் ரூ.1,745 கோடி கேட்டு நோட்டீஸ்

காங்கிரசிடம் மேலும் ரூ.1,745 கோடி கேட்டு ஐ.டி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே 1994-95 மற்றும் 2017-18 முதல் 2020-21 வரையிலான கால கட்டத்துக்கு வரி பாக்கி வைத்திருப்பதாக ரூ.1,800 கோடி செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. தற்போது 2014-15 முதல் 2016-17 வரையிலான காலகட்டத்துக்கு வரி பாக்கி வைத்திருப்பதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையும் சேர்த்து, ரூ.3,567 கோடி ஐ.டி கோரியுள்ளது.
Similar News
News November 9, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..
News November 9, 2025
பாக்., ராணுவத்தில் முக்கிய மாற்றம்

ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவிடம் பாடம் கற்ற பாகிஸ்தான், அதன் அடிப்படையில் ராணுவத்தில் புதிய மாற்றத்தை முன்னெடுத்துள்ளது. இந்தியாவின் முப்படை தலைமை தளபதி (CDS) பதவியை போல, ஒரு தலைமை தளபதி (CDF) பதவியை உருவாக்க உள்ளது. இதன்மூலம், தற்போது பாக்., அரசு & அதிபரிடம் உள்ள ராணுவத்தின் மீதான அதிகாரங்களும் CDF-க்கு மாற்றப்படும். தற்போதைய தளபதியான ஆசிம் முனீர் CDF ஆக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
News November 9, 2025
சிறப்பான கூட்டணி அமையும்: இபிஎஸ்

2026 தேர்தலில் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும் என EPS தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை எனத் தெரிவித்த அவர், திமுக கூட்டணியை நம்புகிறது, அதிமுக மக்களை நம்புகிறது எனக் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் ₹10 லட்சம் கோடி தொழில் முதலீடு என்பது பொய்யான தகவல் என்றும், ₹68,570 கோடி அளவிலான முதலீடுகளே ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் EPS குற்றஞ்சாட்டினார்.


