News March 10, 2025

புனே-குமரி ரயிலில் 12 கிலோ கஞ்சா சிக்கியது

image

புனேயிலிருந்து கன்னியாகுமரிக்கு இன்று காலை 11.30 மணி அளவில் ரயில் வந்தது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இந்த ரயில் வந்த போது என்ஜினை அடுத்துள்ள பெட்டியில் ஒரு பை அனாதையாக கிடந்தது. அதனை சந்தேகத்தின் பேரில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் எடுத்து சோதனை செய்த போது அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அதனை ரயில்வே பாதுகாப்பு படையினர் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News

News March 11, 2025

குமரியில் விமான நிலையம் வேண்டும்: எம்பி கோரிக்கை

image

குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில், “குமரியை உலக தரம் வாய்ந்த சுற்றுலா மையம் மையமாக்குவதற்கு ஒரு விமான நிலையம் தேவை; இதனால் தமிழ்நாட்டு சுற்றுலாவும் இந்திய பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்” என தெரிவித்துள்ளார். விமான நிலையம் அமைவதால் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 10, 2025

குமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

image

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் மாசி கொடை திருவிழா மார்ச் 2 முதல் நாளை வரை நடை பெறுகிறது. இதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நாளை(மார்ச்11) ஒரு நாள் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.*தெரியாதவர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்*

News March 10, 2025

குமரி மாவட்ட மக்கள் குறைத்தீர் கூட்டம் நிறைவு

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் சார்பில் வீட்டுமனை பட்டா, கடன் உதவி, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டது. மொத்தம் 575 மக்கள் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட நிலையில், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

error: Content is protected !!