News March 10, 2025

தனியார்துறை வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்

image

தமிழக அரசு உருவாக்கிய தனியார்துறை வேலைவாய்ப்பு இணையத்தில் விருதுநகர் மாவட்டத்தில் 146 தனியார் துறை நிறுவனங்கள், 19 துறைகளில், 2128 பணிக்காலியிடங்களை உள்ளீடு செய்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவுசெய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 93601-71161 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2025

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மெஷின் ஆப்பரேட்டர் பணிக்கு 25 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000முதல் 25,000 வரை வழங்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 18-40, முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். *வேலை தேடுபவர்களுக்கு இதை ஷேர் செய்யவும்*

News April 20, 2025

விருதுநகர்: திரைப்படங்கள் காண ஆட்சியர் அழைப்பு

image

விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க விருதுநகர், ஸ்ரீவி,ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டியில் ஏப்.25 முதல் மே.01 வரை சிறந்த திரைப்படங்கள் திரையிடும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் 14 வயதுக்குட்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 8608204154 என்ற எண்ணில் அழைக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News April 20, 2025

விருதுநகர்: அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. விருதுநகர் மாவட்டத்தில் 72 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!