News March 10, 2025
ஈரோடு: ஆவின் பாலகம் அமைத்திட ஊக்கத்தொகை

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ஆவின் பாலகம் அமைத்திட ரூ.50,000/- ஊக்கத்தொகை பெறுவதற்கான ஆணையினை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் உட்பட பலர் உள்ளனர்.
Similar News
News March 10, 2025
ஈரோடு: கார் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

பவானி சாகர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.கோடம்பாளையத்தில் சாலையில் உறங்கியவர் மீது மோதாமல் இருக்க காரை திரும்பிய போது விபத்து நேரிட்டது. கர்நாடக மாநிலம் பி.ஜி. பாளையத்தை சேர்ந்த மைக்கேல் உயிரிழந்த நிலையில் 9 பேருக்கு சத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News March 10, 2025
ஈரோடு: மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

ஈரோடு கலெக்டர் அலுவலத்தில் இன்று மக்கள் குரைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனு பெற்று, குறைகள் கேட்டறிந்தார். இந்நிகழ்வில், துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
News March 10, 2025
முதலிடத்தை தக்க வைக்கும் ஈரோடு

ஈரோட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 102 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. தமிழகத்தில் வெயில் அதிகமான பாதிப்பு உள்ள மாவட்டங்களில் ஈரோடு முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. வெப்ப அலை வீசுவதால் பகல் நேரத்தில் வெயிலில் நடமாட வேண்டாம் என்றும், குளிர்ந்த ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.