News March 10, 2025
சர்வதேச விக் தினம் இன்று – வரலாறு தெரியுமா?

இதற்கெல்லாம் தனியாக தினம் இருக்கிறதா என வேடிக்கையாக இருக்கிறதல்லவா?. ஆனால், International Wig Day கடைபிடிக்கப்படுவது வேடிக்கைக்காக அல்ல. புற்றுநோய்க்காக கீமோதெரபி செய்தவர்கள் மற்றும் பிற நோய்களால் தலைமுடியை இழந்தவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வுக்காக இந்த தினம் உருவானது. முதன்முதலில் டென்மார்க் நாட்டில் தான் விக் தினம் கடைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News March 11, 2025
ராசி பலன்கள் (11.03.2025)

➤மேஷம் – பரிசு ➤ரிஷபம் – தனம் ➤மிதுனம் – தேர்ச்சி ➤கடகம் – செலவு ➤ சிம்மம் – ஓய்வு ➤கன்னி – சினம் ➤துலாம் – நஷ்டம் ➤விருச்சிகம் – மறதி ➤தனுசு – ஆதரவு ➤மகரம் – பக்தி ➤கும்பம் – சலனம் ➤மீனம் – ஓய்வு.
News March 11, 2025
வீடியோ காலில் ஆப்ரேஷன்.. கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்

பிஹாரில் கர்ப்பிணி பெண் ஒருவர் தனியார் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியுள்ளார். அப்போது டாக்டர் சஞ்சய் டெல்லியில் இருந்ததால், தனது உதவியாளரை வீடியோ காலில் அழைத்து தான் சொல்ல சொல்ல ஆப்ரேஷன் செய்ய சொல்லி இருக்கிறார். இதில், தவறு நடக்கவே கர்ப்பிணி உயிரிழந்த கொடுமை நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஹாஸ்பிடல் நிர்வாகத்திற்கு ஆதரவாக, போலீஸ் செயல்படுவதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
News March 10, 2025
ஏழைகள் கந்துவட்டிக்கு பலிகடா ஆவதா? சீமான் ஆவேசம்

வங்கி நகைக்கடன் குறித்த புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற சீமான் வலியுறுத்தியுள்ளார். நகைகளை அசல், வட்டி செலுத்தி திருப்பிய பின்னர் மறுநாள் தான், அதே நகைகளை வைத்து பணம் பெற முடியும் என்பது, ஏழைகளை கந்துவட்டி வாங்க வைக்கும் கொடும் அணுகுமுறை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, வட்டியை மட்டும் செலுத்தி, நகையை மறு அடகு வைக்க இயலும் பழைய நடைமுறையே தொடரப்பட கோரிக்கை விடுத்துள்ளார்.