News March 10, 2025
CT நிறைவு நிகழ்ச்சியில் PCB பங்கேற்காதது ஏன்?

CT தொடரின் நிறைவு நிகழ்ச்சியில், அத்தொடரை நடத்திய பாக். கிரிக்கெட் வாரியம் (PCB) சார்பில் யாரும் பங்கேற்காதது சர்ச்சையானது. PCB தலைவரால் வர இயலவில்லை என ICC செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருந்தார். ஆனால், ICC தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்படாததால்தான், PCB தரப்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ICCயிடம் PCB முறையிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News March 10, 2025
ஏழைகள் கந்துவட்டிக்கு பலிகடா ஆவதா? சீமான் ஆவேசம்

வங்கி நகைக்கடன் குறித்த புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற சீமான் வலியுறுத்தியுள்ளார். நகைகளை அசல், வட்டி செலுத்தி திருப்பிய பின்னர் மறுநாள் தான், அதே நகைகளை வைத்து பணம் பெற முடியும் என்பது, ஏழைகளை கந்துவட்டி வாங்க வைக்கும் கொடும் அணுகுமுறை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, வட்டியை மட்டும் செலுத்தி, நகையை மறு அடகு வைக்க இயலும் பழைய நடைமுறையே தொடரப்பட கோரிக்கை விடுத்துள்ளார்.
News March 10, 2025
டாக்டர் வேல்முருகேந்திரன் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

வயது மூப்பின் காரணமாக இந்தியாவின் முன்னணி நரம்பியல் நிபுணரான டாக்டர் சி.யு. வேல்முருகேந்திரன் காலமானார். அவரது உடல், சென்னையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. அவரது வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று, சி.யு.வேல்முருகேந்திரன் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
News March 10, 2025
150 கோடியாம்… வசூலில் ஃபயர் விடும் ‘டிராகன்’…!

தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சியடைந்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அவர் இயக்கி நடித்த லவ் டுடே படம் வசூலில் சக்கைப்போடு போட்டது. அவரது நடிப்பில் 2வது படமாக ரிலீசான ‘டிராகன்’, அவரது மார்க்கெட்டை மேலும் உயர்த்தி இருக்கிறது. ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக சில நாட்களுக்கு முன் படக்குழு அறிவித்தது. இந்நிலையில், படத்தின் வசூல் ரூ.150 கோடியை நெருங்குவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.