News March 10, 2025

பூண்டு விலை கடும் சரிவு!

image

சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் முதல் ரக பூண்டு ஒரு கிலோ ₹90 ஆகக் குறைந்துள்ளது. 2ஆம் ரக பூண்டு ₹80க்கும், 3ஆம் ரக பூண்டு ₹70க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ பூண்டு ₹100 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஒரு கிலோ பூண்டு ₹400 முதல் ₹500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த விலை குறைப்பால் இல்லத்தரசிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News March 10, 2025

REWIND: கோவிட் பெருந்தொற்று அறிவிக்கப்பட்ட நாள்

image

2020ஆம் ஆண்டு இதே நாளில்தான் கொரொனாவை பெருந்தொற்றாக (pandemic) உலக சுகாதார மையம் அறிவித்தது. 2019 டிசம்பர் மாதத்தில் சீனாவில் முதல் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. அது, 2020 ஜனவரி மாதத்தில் உலகம் முழுவதும் பரவியது. பின்னர், 2020 மார்ச் மாதத்தில் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் நடந்த லாக்-டவுன், மாஸ்க், தடுப்பூசி, குவாரண்டைன் கதைகள் எல்லாம் உங்களுக்கே தெரியும்.

News March 10, 2025

ஹாரி பாட்டர் பட நடிகர் மரணம்

image

ஹாலிவுட்டில் வசூலை குவித்த படங்களில் ஹாரிபாட்டர் படங்களும் ஆகும். அதில் 2001இல் வெளியான ‘ஹாரிபாட்டர் அன்ட் தி பிளாசபர் ஸ்டோன்’ படத்தில் Ghost The Fat Friar கதாபாத்திரத்தில் நடித்தவர் சைமன் பிசர் (63) ஆவார். அவர் நேற்று மதியம் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மரணத்திற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. சைமன் பிசர் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News March 10, 2025

ஜெயலலிதா இன்று இருந்திருந்தால்?

image

ஜெயலலிதா உயிரோடு இருக்கையில், அதிமுகவினர் தங்களுக்குள் ஒருவரையொருவர் விமர்சித்தது இல்லை. கூட்டணி குறித்து பேட்டி அளித்தது இல்லை. ஆனால், அண்மையில் ராஜேந்திர பாலாஜி, மா.பா. பாண்டியராஜன் மோதல் விவகாரம், கூட்டணி குறித்த மூத்த தலைவர்கள் பேட்டி உள்ளிட்டவை தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மட்டும் இன்று இருந்திருந்தால், இதுபோல நடக்குமா? என அவர்கள் பேசி வருகின்றனர்.

error: Content is protected !!