News March 10, 2025
யார் அந்த சூப்பர் முதல்வர்? அமைச்சர் போட்ட புது குண்டு

தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்கப்படாதது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் சரமாரியாக கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்க தமிழக முதல்வர் முதலில் சம்மதித்ததாக கூறினார். ஆனால், சூப்பர் முதல்வர் அதை தடுத்துவிட்டதாகவும், அந்த சூப்பர் முதல்வர் யார் என கனிமொழிதான் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News March 10, 2025
ஈரோடு: மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

ஈரோடு கலெக்டர் அலுவலத்தில் இன்று மக்கள் குரைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனு பெற்று, குறைகள் கேட்டறிந்தார். இந்நிகழ்வில், துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
News March 10, 2025
ஆணவக் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

தெலங்கானாவில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த பிரனாய் பெருமுல்லா (24) என்ற தலித் இளைஞர், கடந்த 2018இல் வெட்டிக் கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இவ்வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அப்பெண்ணின் தந்தை மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், பிரணாயை கொலை செய்த கூலிப்படை தலைவன் சுபாஷ் சர்மாவுக்கு மரண தண்டனை விதித்து நல்கொண்டா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
News March 10, 2025
தர்மேந்திர பிரதானுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

நாடாளுமன்றத்தில் மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் எனக் கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தனது கருத்தை அவர் வாபஸ் பெற்ற போதிலும், அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல்வேறு பகுதிகளில் தர்மேந்திர பிரதானின் உருவபொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டது.