News March 10, 2025
நீலகிரி: அரசு தலைமை நீர் பகுப்பாய்வகத்தில் வேலை

தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு முதல் B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். ஊதியமாக ரூ.8500 முதல் ரூ.21,000 வரை வழங்கப்படும். கடைசி நாள் 11.3.25 ஆகும். விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News August 21, 2025
நீலகிரி: தனியார் வேலை வாய்ப்பு முகாம்

நீலகிரி, ஊட்டியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக நாளை பிங்கர் போஸ்டில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு, பட்டதாரிகள், ஐடிஐ கணினி இயக்குபவர்கள், ஓட்டுனர்கள் என அனைத்து விதமான தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News August 21, 2025
நீலகிரி காவலர்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா தலைமையில் இன்று காவலர்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டமானது நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எடுத்துக் கூறினார்.
News August 21, 2025
போக்சோ மற்றும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை தாலுக்கா, குன்னூர் தாலுக்கா, கூடலூர் தாலுக்கா, கோத்தகிரி தாலுக்கா, பந்தலூர் தாலுக்கா, குந்தா தாலுக்கா, போன்ற ஆறு தாலுகாவிலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் பிரதான சாலைகள் மற்றும் பள்ளிகளில், இன்று நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக போக்சோ மற்றும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வை அனைத்து பகுதிகளிலும் ஏற்படுத்தினர்.