News March 10, 2025
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 5 பேர் பலி!

மும்பையின் நக்படா பகுதியில் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஹசிபல் ஷேக், ராஜா ஷேக், ஜியாவுல்லா ஷேக், ஹிமாந்த் ஷேக் ஆகியோர் நேற்று உயிரிழந்த நிலையில், ஹாஸ்பிடலில் சிகிச்சைப் பலனின்றி பர்ஹான் ஷேக் இன்று மரணமடைந்தார். புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் விஷவாயு தாக்கியது எப்படி என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 10, 2025
CT நிறைவு நிகழ்ச்சியில் PCB பங்கேற்காதது ஏன்?

CT தொடரின் நிறைவு நிகழ்ச்சியில், அத்தொடரை நடத்திய பாக். கிரிக்கெட் வாரியம் (PCB) சார்பில் யாரும் பங்கேற்காதது சர்ச்சையானது. PCB தலைவரால் வர இயலவில்லை என ICC செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருந்தார். ஆனால், ICC தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்படாததால்தான், PCB தரப்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ICCயிடம் PCB முறையிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
News March 10, 2025
மணிக்கு 12,144 கி.மீ. வேகம்.. இந்திய பிரம்மாஸ்திரம் தயார்

மணிக்கு 12,144 கி.மீ. வேகத்தில் பாயும் ஏவுகணையை இந்தியா உருவாக்கியுள்ளது. LRAShM என்ற அந்த ஏவுகணை, 1,500 கி.மீ. தூரம் வரை பாயும். இது கப்பல் தகர்ப்பு ஏவுகணை. ஒலியின் வேகத்தை விட 10 மடங்கு வேகமுடையது. 3.37 கி.மீ. தூரத்தை 1 விநாடியில் கடக்கும். இந்த வேகத்தில் பயணித்தால் டெல்லி- வாஷிங்டனுக்கு ஒரு மணி நேரமும், மும்பையில் இருந்து கராச்சிக்கு 5 நிமிடமுமே ஆகும். USA, சீனாவிடமே இத்தகைய ஏவுகணை உள்ளது.
News March 10, 2025
அந்த சூப்பர் CM இவர் தான் : அண்ணாமலை

பதட்டத்தில் பிதற்றும் முதல்வரே, திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என மத்திய அமைச்சர் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்?. உங்கள் வாரிசு, தனியார் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சி உறுப்பினர்களா? என கேள்வி எழுப்பிய அவர், அந்த சூப்பர் CM ஸ்டாலின் தான் என்று விமர்சித்துள்ளார்.