News March 10, 2025
ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகள் யாருக்கு?

CT இறுதி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 83 பந்துகளில் 76 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் ரோகித் சர்மா, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர் முழுவதும் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக, நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவிந்திராவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 263 ரன்களை அவர் குவித்துள்ளார்.
Similar News
News March 10, 2025
காசு இல்லாமல் பாதியில் நின்ற லோகேஷ் படம்..!

லோகேஷ் கனகராஜின் கதை மற்றும் தயாரிப்பில் ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ படம் பாதியில் நின்றிருக்கிறது. பணப் பிரச்னை காரணமாக இந்த படத்தினை தொடர முடியாமல் போனதால் தான், லாரன்ஸ் தற்போது ‘காஞ்சனா 4’ படத்திற்கு சென்று விட்டாராம். கூலி படத்தை முடித்த கையோடு இந்த படத்தின் ஷூட்டிங்கை லோகேஷ் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய சினிமாவின் முக்கிய டைரக்டருக்கே இந்த நிலைமையா?
News March 10, 2025
வங்கியில் ₹51,000 வரை சம்பளம்… டிகிரி போதும்!

IDBI வங்கியில் 650 Junior Assistant Manager காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. 20 – 25 வயதிற்குட்பட்ட எந்த டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். எழுத்து, நேர்முக தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ஊக்கத்தொகையுடன் PG Diploma பயிற்சி அளிக்கப்படும். சம்பளம் மாதம் ₹51,000 வரை வழங்கப்படும். வரும் 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
News March 10, 2025
CT தொடரில் மட்டும் ஏன் White கோட் அணிகின்றனர்?

இதனை எத்தனை பேர் கவனித்தீர்கள்! CT தொடரில் மட்டும் ஜெர்சியுடன் வெள்ளை கலர் கோட்டையும் அணிந்து கோப்பையை பெறுவார்கள். இது மரியாதையின் அடையாளம் என்று கூறப்படுகிறது. வீரர்களின் மகத்துவத்தையும், விடாமுயற்சியையும் பிரதிபலிப்பதாக ICC சுட்டிக்காட்டுகிறது. CT தொடர் 1998 இல் தொடங்கினாலும், இந்த வெள்ளை சூட்டை அணியும் வழக்கம் 2009 ஆம் ஆண்டில் இருந்து தான் தொடங்கியது.