News March 9, 2025

இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

image

2013-ல் தோனி தலைமையில் இந்திய அணி, சாம்பியன் டிராபியை வென்றது. 12 ஆண்டுகளுக்கு பின், ரோகித் தலைமையில் மீண்டும் வென்றதை, நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐசிசி டிராபி வென்றதற்கு பெருமை அடைவதாகவும், தொடர் முழுவதுமே இந்தியா சிறப்பாக விளையாடியதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

Similar News

News August 16, 2025

Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

image

11:30 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விகளுக்கு <<17423028>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
பதில்கள்:
1. கேரளா
2. 1952
3. முளைக்குருத்து
4. பர்மா
5. விக்கல்

News August 16, 2025

இல.கணேசன் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி

image

மறைந்த நாகலாந்து கவர்னரும், மூத்த அரசியல் தலைவருமான இல.கணேசன் உடலுக்கு முதல்வர் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன்பின் அவரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், அங்கிருந்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டோரிடம் துக்கம் விசாரித்தார். அவரை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் நேரு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

News August 16, 2025

வடை சுடுவதில் PM சாதனை: CPM சண்முகம் தாக்கு

image

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் சிறப்புரையாற்றி இருந்தார் PM மோடி. இளைஞர்களுக்கான திட்டம், ஜிஎஸ்டி உள்பட 8 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில், இவரது உரையை விமர்சித்த சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுவதையே வழக்கமாக வைத்துள்ள PM மோடி, இம்முறை 103 நிமிடங்கள் பேசி அதிக வடைகளை சுட்டு சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்

error: Content is protected !!