News March 9, 2025
நான் அதை செய்தால் உக்ரைன் காலி: எலான் மஸ்க்

வெள்ளை மாளிகையில் ட்ரம்புடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்திருந்தார். தற்போது மீண்டும் மஸ்க், ஜெலன்ஸ்கியை வம்புக்கு இழுப்பது போல் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில்,எனது ஸ்டார்லிங்க் இன்டர்நெட்தான் உக்ரைன் ராணுவத்தின் முதுகெலும்பாக உள்ளது. அதை ஆப் செய்தால் உக்ரைனின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் காலியாகிவிடும் என பதிவிட்டுள்ளார்.
Similar News
News July 8, 2025
இசையமைப்பாளர் கீரவாணி தந்தை காலமானார்

AR ரஹ்மானுக்கு பிறகு இந்தியாவில் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி. இவரின் தந்தையும், பாடலாசிரியருமான சிவ சக்தி தத்தா(83) வயது மூப்பால் காலமானார். தனது கவித்துவமான வரிகளை கொண்டு பாகுபலி, RRR உள்பட பல்வேறு படங்களுக்கு ஹிட் பாடல்களை அவர் எழுதியுள்ளார். சிவ சக்தி தத்தா மறைவுக்கு சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News July 8, 2025
சுக்கிரன் பெயர்ச்சி.. 5 ராசியினருக்கு ஜாக்பாட்!

சுக்கிர பகவான் இன்று (ஜூலை 8) ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்திருப்பதால் 5 ராசியினருக்கு நிதி நிலைமை மேம்படுமாம். *ரிஷபம்: திடீர் பண ஆதாயம் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு. *மிதுனம்: வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். *கன்னி: புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். *துலாம்: பண ஆதாயம் அதிகரிக்கும். *விருச்சிகம்: தொழில் வளர்ச்சி அடையும். செல்வம் பெருகும்.
News July 8, 2025
நாளை வரும் கலையரசனின் ‘டிரெண்டிங்’ டிரைலர்

கலையரசனை வைத்து அறிமுக இயக்குநர் சிவராஜ் இயக்கியுள்ள படம் டிரெண்டிங். இப்படம் ஒரு வ்லாகிங் செய்யும் தம்பதிகளை பற்றிய கதையாக அமைந்துள்ளது. வரும் 18-ம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே என்னிலே என்னிலே வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.