News March 9, 2025
ட்ரெண்டிங்கில் #Retirement

Champions Trophy தொடரின் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் #Retirement என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. நியூசி., அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கு பின் நட்சத்திர வீரர் ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர் ஷமி ஆகியோர் தங்களது ஓய்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இருவரின் புகைப்படத்தையும் பதிவிட்டு நெட்டிசன்கள், கனத்த இதயத்துடன் வாழ்த்து கூறுகின்றனர்.
Similar News
News March 10, 2025
தாயை பின் தொடரும் ஸ்ரீதேவியின் மகள்

ஸ்ரீதேவி கடைசியாக நடித்த ‘மாம்’ படத்தின் 2ஆம் பாகத்தில் அவரின் மகள் குஷி கபூர் நடிக்க உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவரது தந்தை போனி கபூர் ‘மாம் 2’ படத்தை தானே தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். தனது மகள்கள் இருவரும் ஸ்ரீதேவியின் வழியில் செல்வதையே விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மாம் படத்திற்காக ஸ்ரீதேவி தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
News March 10, 2025
இலங்கை கிரிக்கெட்டருக்கு இந்தியாவில் இலவச இடம்?

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், செவ்லான் என்ற குளிர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்திற்கு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ₹1,600 கோடியில் அலுமினியம் கேன் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க, 25.75 ஏக்கர் நிலம் இலவசமாக ஒதுக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. காஷ்மீர் சட்டசபையில் தற்போது இவ்விவகாரம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
News March 10, 2025
‘நீட்’ விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய நாளை கடைசி நாள்

UG ‘நீட்’ தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நாளையுடன் (மார்ச் 11) அவகாசம் நிறைவடைகிறது. கடந்த 07.02.2025 முதல் 07.03.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் மே 4ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ள நிலையில், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.