News March 31, 2024
அஞ்சலி செலுத்தினார் முதல்வர்

மறைந்த ஈரோடு எம்.பி கணேசமூர்த்தியின் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அத்துடன், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். 2024 தேர்தலில் மீண்டும் சீட் தராததால் அதிருப்தியில் இருந்த கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மார்ச் 28ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
Similar News
News January 18, 2026
விக்ரம் சாராபாய் பொன்மொழிகள்

*முன்னேற விரும்பினால், புதிய பாதைகளைத் தேடத் தயங்கக்கூடாது. *இளைஞர்களின் கனவுகள் தான் ஒரு நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குகின்றன. *இரைச்சலுக்கு மத்தியில் இசையை கேட்கத் தெரிந்தவனால் மகத்தான சாதனைகளை நிகழ்த்த முடியும். *விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்து வரும் நாடுகளின் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமானவை. *ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் அறிவியல் மனப்பாங்கில் தான் அடிப்படையாக உள்ளது.
News January 18, 2026
சவுதி அரேபியாவில் அரிய சிறுத்தை மம்மிகள்

வடக்கு சவுதி அரேபியாவில் உள்ள குகைகளில் அரிய சிறுத்தை எச்சங்களை (மம்மிகள்) கண்டுபிடித்துள்ளனர். அவை 130 – 1800 ஆண்டுகள் பழமையானவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அரார் நகருக்கு அருகே 7 சிறுத்தை மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றுடன் 54 சிறுத்தை எலும்புகளும் இருந்தன. பாலைவனங்கள், பனிப்பாறைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் மம்மிகேஷன் இயற்கையாகவே நிகழ்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
News January 18, 2026
RCB ஆல்-ரவுண்டர் U19 WC-ல் அசத்தல்

U19 WC-ல் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த விஹான் மல்ஹோத்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இளம் ஆல்-ரவுண்டரான விஹான், IPL 2026 ஏலத்தில் RCB அணியால் ₹30 லட்சத்திற்கு வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


