News March 9, 2025

‘ரெட்ரோ’ அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்

image

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான கண்ணாடி பூவே பாடல் வெளியாகி சோஷியல் மீடியாவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 2வது பாடல் விரைவில் வெளியாகும் என்றும், அது வித்தியாசமாக இருக்கும் என்றும் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Similar News

News March 10, 2025

கனமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலெர்ட்

image

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில், ஒருசில இடங்களில் நாளை (மார்ச் 11) மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுத்துள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்த மையம் கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

News March 10, 2025

ஆரம்பமே அமர்க்களம்: டிரம்புக்கு டஃப் தரும் கார்னே

image

கனடா பிரதமராக லிபரல் கட்சியின் மார்க் கார்னே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து வங்கியின் முன்னாள் கவர்னரான இவர், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை குறைக்கப் போவதில்லை என டிரம்புக்கு டஃப் கொடுத்துள்ளார். பிரதமர் போட்டியில், துணை பிரதமர், முன்னாள் அமைச்சர் என 4 பேரை முந்தியிருக்கிறார். இதுவரை தேர்தலையே சந்திக்காதவர் எப்படி வெற்றி பெற்றார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகி இருக்கிறது.

News March 10, 2025

இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று லீவு

image

புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தேரோட்டத்தை ஒட்டி இன்று (மார்ச் 10) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோயில் திருவிழா தேரோட்டத்தை ஒட்டி வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறையாகும். அதேநேரம் பொதுத்தேர்வில் எவ்வித மாற்றமுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!