News March 9, 2025
CT FINAL: கேட்ச் பிடிப்பதில் கோட்டைவிடும் இந்திய வீரர்கள்

CT ஃபைனலில் இந்தியா சிறப்பாக பந்துவீசி வருகிறது. ஆனால், ஃபீல்டிங்கில் நம் வீரர்கள் சொதப்புகின்றனர். மொத்தமாக 4 கேட்சுகளை தவறவிட்டுள்ளனர். 7, 8வது ஓவர்களில் ரச்சின் கொடுத்த வாய்ப்பை ஷமி, ஸ்ரேயாஸ் மிஸ் செய்தனர். 35வது ஓவரில் மிட்செல் கேட்சை ரோகித் தவறவிட்டார். அடுத்த ஓவரிலேயே பிலிப்ஸ் கொடுத்த கடினமான கேட்சை கில் விட்டுவிட்டார். ஃபைனலில் இந்திய வீரர்கள் கேட்ச் விடுவது பற்றி உங்கள் கருத்து?
Similar News
News March 10, 2025
மார்ச் 14: ரீ-ரிலீஸாகும் SK, ரவி மோகன் படங்கள்!

ரீ-ரிலீஸ் படங்களின் வரிசையில் வரும் 14 ஆம் தேதி தமிழ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான். ரவி மோகன் ஜெயம் ரவியாக இருந்தபோது நடித்த மெகா ஹிட் படமான ‘எம்.குமரன் S/O மகாலட்சுமி’ மற்றும் SKயின் ‘ரஜினிமுருகன்’ படம் வெளியாகின்றன. பராசக்தியில் தான் சண்டைபோட போகிறார்கள் என்றால், இப்போது ரீ-ரிலீசிலும் சண்டை தான். இந்த இரண்டு படங்களில் உங்க ஃபேவரைட் எது?
News March 10, 2025
பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் விநியோகம்

மாசி மாத சுபமுகூர்த்த நாளான இன்று, பத்திரப்பதிவு மேற்கொள்ள, கூடுதல் டோக்கன் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வழக்கமாக, 100 டோக்கன் வழங்கப்படும் சார்-பதிவாளர் அலுவலகங்களில் 150 டோக்கன்களும், 200 டோக்கன் வழங்கப்படும் அலுவலகங்களில் 300 டோக்கன்களும் வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. கடந்த மாதம் 10ஆம் தேதி ஒரே நாளில் ₹237 கோடி அரசு வருவாய் ஈட்டியது கவனிக்கத்தக்கது.
News March 10, 2025
கனமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலெர்ட்

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில், ஒருசில இடங்களில் நாளை (மார்ச் 11) மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுத்துள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்த மையம் கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?