News March 9, 2025
திருப்பதியில் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள குடூர் ரயில் நிலையம் அருகே ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று சென்ற போது, இளைஞர் ஒருவர் சிகப்புத் துணியை காண்பித்து ரயிலை நிறுத்தினார். ஓட்டுநர் இறங்கி வந்து பார்த்த போது அங்கு ரயில் தண்டவாளம் உடைக்கப்பட்டிருந்தது. இளைஞரின் துரித செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர். மேலும், இது சதிச்செயலா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 10, 2025
ஆரம்பமே அமர்க்களம்: டிரம்புக்கு டஃப் தரும் கார்னே

கனடா பிரதமராக லிபரல் கட்சியின் மார்க் கார்னே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து வங்கியின் முன்னாள் கவர்னரான இவர், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை குறைக்கப் போவதில்லை என டிரம்புக்கு டஃப் கொடுத்துள்ளார். பிரதமர் போட்டியில், துணை பிரதமர், முன்னாள் அமைச்சர் என 4 பேரை முந்தியிருக்கிறார். இதுவரை தேர்தலையே சந்திக்காதவர் எப்படி வெற்றி பெற்றார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகி இருக்கிறது.
News March 10, 2025
இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று லீவு

புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தேரோட்டத்தை ஒட்டி இன்று (மார்ச் 10) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோயில் திருவிழா தேரோட்டத்தை ஒட்டி வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறையாகும். அதேநேரம் பொதுத்தேர்வில் எவ்வித மாற்றமுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 10, 2025
KV பள்ளிகளில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள 45 KV பள்ளிகளில், சில பள்ளிகளில் மட்டுமே 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பால்வாடிகா என்ற KG முதல்நிலை வகுப்பில் சேர்க்கும் வசதி உள்ளது. அதன்படி, <