News March 9, 2025
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,912 வழக்குகளுக்கு தீர்வு!

சேலம், சங்ககிரி, ஓமலூர், மேட்டூர், ஏற்காடு, வாழப்பாடி, இடைப்பாடி உள்ளிட்ட நீதிமன்றங்களில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 16 அமர்வுகளில் சமரசம் செய்யக்கூடிய 5,024 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 3,912 வழக்குகளில் தீர்வுக் காண்ப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 48.36 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.
Similar News
News September 10, 2025
சேலம்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்!

சேலம் மாநகராட்சியில் (10.09.2025)-ம் தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.
News September 10, 2025
சேலம்: பொருளாதார குற்றமா அழையுங்கள் 1930!

சேலம் மாநகர காவல் துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையில் விழிப்புணர்வு விளம்பரங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் தற்போது ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்து வருகிறது ஆகையால் பொதுமக்கள் செல்போனில் வரும் எந்த விதமான கடன் உதவிகள் கட்டண விளையாட்டுகள் போன்ற எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News September 10, 2025
சேலம்: திருநங்கையை கரம் பிடித்த இளைஞர்!

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தாரமங்கலத்தைச் சேர்ந்த சரவணகுமார் (வயது 32) என்பவர் மணியனூரைச் சேர்ந்த திருநங்கை சரோ என்பவரை இருவீட்டாரின் சம்மதத்துடன் முறைபடி திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு பல்வேறு தரப்பினரும் திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உங்கள் வாழ்த்துகளை கீழே கமெண்ட் செய்யுங்கள்!