News March 31, 2024
முதல்முறையாக அரசியலில் நுழைந்த டிடிவி மனைவி

டிடிவி தினகரன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதுவரை அரசியலில் ஈடுபடாத அவரது மனைவி, முதல்முறையாக கணவருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். போடி அருகே உள்ள கிராமங்களில் டிடிவிக்காக அவரது மனைவி அனுராதா வீடுவீடாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு அளித்தனர். அனுராதா வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
Similar News
News January 23, 2026
விடுமுறை.. 4 நாள்களுக்கு அரசு ஹேப்பி நியூஸ்

தொடர் விடுமுறை நாள்கள், குடியரசு தினத்தையொட்டி TN முழுவதும் இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நெரிசலின்றி சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில், ஜன.26 வரை 1,000-க்கும் மேற்பட்ட பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளோர் உடனடியாக TNSTC இணையதளம் (அ) ஆப் மூலம் டிக்கெட்டை புக் செய்யுங்கள். SHARE IT.
News January 23, 2026
11 கட்சிகளுடன் வலுவாக உருவெடுத்த NDA கூட்டணி

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான NDA கூட்டணியில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 11 கட்சிகள் இணைந்துள்ளன. அதன்படி, அதிமுக, பாஜக, பாமக (அன்புமணி), அமமுக, தமாகா, தமமுக (ஜான் பாண்டியன்), புதிய நீதிக்கட்சி (ஏ.சி.சண்முகம்), புரட்சி பாரதம் (ஜெகன் மூர்த்தி), ஐஜேகே (பாரிவேந்தர்), பார்வார்டு பிளாக் (திருமாறன்ஜி), உழவர் உழைப்பாளர் கட்சி (செல்லமுத்து) ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து வலுவான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
News January 23, 2026
அதிமுக – அமமுக இணைப்புக்கு அமித்ஷாவே காரணம்: TTV

அதிமுக விவகாரம் எங்கள் குடும்ப பிரச்னை; நானும், அண்ணன் EPS-ம் எப்போது இணைந்தோமோ, அப்போதே அனைத்தையும் மறந்துவிட்டோம் என TTV தெரிவித்தார். 2021-ல் இருவரும் இணைய வேண்டும் என அமித்ஷா விரும்பினார். அப்போது நடக்கவில்லை; ஆனால், இப்போது நடந்துவிட்டது எனக் கூறிய அவர் 2017-க்கு முன் இருவரும் எப்படி இருந்தமோ, அதேபோல் அண்ணன், தம்பியாக இணைந்தே தேர்தல் பரப்புரை செய்வோம் எனவும் தெரிவித்தார்.


