News March 9, 2025

ஈரோடுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், உலக மகளிர் தினம் நேற்று (மார்ச் 8) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஈரோடு, காஞ்சி, சிவகங்கை, தேனி, கரூர், நாகை, கடலூர், ராணிப்பேட்டை ஆகிய ஊர்களில் 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமையும் என்றார். இது ஈரோடு பெண்கள் மத்தியில் வரவேற்ப்பு பெற்றுள்ளது. ( Share பண்ணுங்க)

Similar News

News August 18, 2025

பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்!

image

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி இன்று (18.08.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உட்பட பலர் உள்ளனர்.

News August 18, 2025

ஈரோடு: டிகிரி முடித்திருந்தால்.. ரூ.64,000 சம்பளம்!

image

ஈரோடு மக்களே.. Repco வங்கியில் காலியாக உள்ள 30 Customer Service Associate/Clerk பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<> கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 08-09-2025 ஆகும். இதை உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 18, 2025

ஈரோடு: மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம்

image

மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம், வரும் ஆக.20ம் தேதி காலை, 11 மணிக்கு பெருந்துறை சேனடோரியம் கருமாண்டி செல்லிபாளையம் செயற்பொறியாளரின், பெருந்துறை கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. இதில் பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம், நல்லாம்பட்டி பகுதி மக்கள், குறைகளை கூறி நிவர்த்தி பெறலாம்.

error: Content is protected !!