News March 9, 2025
சேலத்தில் பெண்ணை கேலி, கிண்டல் செய்த வாலிபர் கைது

சேலம் தம்மநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது20). இவர் கொண்டலாம்பட்டி பகுதியில் பெண் ஒருவரை வேலைக்கு செல்லும்போது வழிமறித்து கேலி, கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Similar News
News September 13, 2025
சேலம்: IOB வங்கி வேலை விண்ணபிப்பது எப்படி?

▶️இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன▶️ இதற்கு Any Degree அல்லது B.E./B.Tech, MBA, M.Sc, MCA, M.E./M.Tech முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் ▶️ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும் ▶️ஆன்லைன் தேர்வு, நேர்காண மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும் ▶️நவ.3ஆம் தேதிக்குள் www.iob.in/Careers என்ற இணையதளத்தில் விண்ணபிக்க வேண்டும் ▶️SHARE பண்ணுங்க!
News September 13, 2025
சேலத்தில் இலவச பயிற்சி: ₹5,600 ஊக்கத்தொகையுடன்!

சேலம் மாவட்டத்தில் கட்டுமான நலவாரியத்தில் பதிவுச் செய்துள்ள தொழிலாளர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்குமாறு சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சஙகீதா அழைப்பு விடுத்துள்ளார். கோரிமேடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 7 நாட்கள் இலவச மதிய உணவு மற்றும் பயிற்சி சான்றிதழ் மற்றும் ஒரு நாளைக்கு ரூபாய் 800 வீதம் மொத்தம் ரூபாய் 5,600 வழங்கப்படுகிறது.
News September 13, 2025
சேலத்தில் லிப்ட் கேட்டு வந்த பெண் பலி

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே நடந்த சாலை விபத்தில் கடலூரைச் சேர்ந்த சாந்தி (50) என்ற பெண் உயிரிழந்தார். சிறுவாச்சூரிலிருந்து தலைவாசல் நோக்கி ‘லிப்ட்’ கேட்டு பைக்கில் சென்றபோது, பட்டுத்துறை அருகே கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதன் பின் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தலைவாசல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.