News March 9, 2025

ராஜாதி ராஜன் இந்த ராஜா!

image

இசைஞானி இளையராஜா லண்டனில் இன்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். அது அவரது நீண்ட நாள் கனவாக இருந்தது. மேற்கத்திய இசையுடன் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானிய இசையை ஒருங்கிணைத்து 1986, 1988ம் ஆண்டுகளில் நீண்ட நேர இசைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். அப்போதே சிம்பொனியில் ஆர்வம் காட்டி வந்தார். மொஸார்ட், பீத்தோவன் வரிசையில் சிம்பொனியை அரங்கேற்றி நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார்.

Similar News

News March 10, 2025

CT: அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்

image

CTல் அதிக ரன்கள் குவித்த நியூசி., வீரர் ரச்சின் ரவீந்திரன் (263) போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து IND வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் (243), பென் டக்கெட் (227), ஜோ ரூட் (225) ஆகியோர் அடுத்தடுத்து இடம்பிடித்துள்ளனர். நியூசி., பந்துவீச்சாளர் ஹென்றி (10W), வருண் சக்ரவர்த்தி (9), சான்ட்னர் (9), ஷமி (9), பிரேஸ்வெல் (8) ஆகியோர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

News March 10, 2025

இன்றைய (மார்ச் 10) நல்ல நேரம்

image

▶மார்ச்- 10 ▶மாசி – 26 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 06:30 AM – 07:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 09:00 AM – 10:00 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM ▶எமகண்டம்: 10:30 PM – 12:00 PM ▶குளிகை: 01:30 AM- 03:00 AM ▶திதி: துவாதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: மூலம் ▶நட்சத்திரம் : பூசம்.

News March 10, 2025

ஒரே நாளில் ஒர் ஆண்டுக்கான மழை… 13 பேர் பலி

image

அர்ஜென்டினாவின் பஹியா பிளாங்கா நகரில் நேற்று முன்தினம் புயலோடு கனமழை கொட்டித் தீர்த்தது. ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை சில மணி நேரங்களில் பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். மேலும் வெள்ளத்தில் வீடுகள், ஹாஸ்பிடல்கள் மிதப்பதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். கரை புரண்டு ஓடிய வெள்ளத்தில் வாகனங்களும் அடித்து செல்லப்பட்டன.

error: Content is protected !!