News March 9, 2025
சிரியாவில் பயங்கர மோதல்: 2 நாட்களில் 600 பேர் பலி!

சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடர்கிறது. கடந்த 2 நாட்களில் பாதுகாப்புப் படையினருக்கும், முன்னாள் அதிபர் பஷார் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 600 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரு பிரிவினரிடையே மோதல் தொடங்கியதில் இருந்து நடந்த மிக மோசமான வன்முறை இதுவாகும். தெருக்களிலும் கட்டிடங்களிலும் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. பனியாஸ் நகரத்தில்தான் இறப்பு எண்ணிக்கை அதிகம்.
Similar News
News March 10, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News March 10, 2025
அது சினிமா படப்பிடிப்பு: பிக்பாஸ் விக்ரமன் விளக்கம்

சென்னை அய்யப்பன்தாங்கலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், இளைஞருக்கு பெண் வேடமிட்டு வந்து ஒருவர் பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ வெளியாகியது. பின்னர், அது பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் என செய்திகள் வந்தன. இந்நிலையில், அது சினிமா படப்பிடிப்பு என்றும், அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விக்ரமன் எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்தார்.
News March 10, 2025
இப்போதே வேட்பாளரை தேர்வும் செய்யும் இபிஎஸ்?

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் இப்போதே தயாராகி வருகிறது. இந்நிலையில் பத்மநாபபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான் தங்கம் நிறுத்தப்படுவதாக இபிஎஸ் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜான் தங்கம் குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ள நிலையில், இந்த முறை எம்எல்ஏ ஆக வேண்டும், வேட்பாளர் நீதான் என இபிஎஸ் உறுதியளித்துள்ளாராம்.