News March 9, 2025
‘காளிதாஸ் 2’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

2019-ம் ஆண்டு பரத் ‘காளிதாஸ்’ என்ற திரில்லர் படத்தில் நடித்து இருந்தார். போலீஸ் அதிகாரியாக நடித்த அந்தப்படம் மக்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, இதன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்நிலையில், ‘காளிதாஸ் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். கோடை விடுமுறையில் படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Similar News
News March 10, 2025
அங்கீகாரம் பெறாத KL ராகுல்!

2023 ODI WC தோல்விக்கு இவர்தான் காரணம். பண்ட் இருக்கும்போது இவர் ஏன் விளையாடுகிறார்? இதெல்லாம் KL ராகுலுக்கு எதிராக CTல் வந்த விமர்சனங்கள். ‘நான் வேறு என்ன செய்ய வேண்டும்?’ என சமீபத்தில் ராகுல் கொதித்தார். AUSக்கு எதிரான போட்டியில் அரையிறுதியில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்றது மட்டுமின்றி, இறுதிப் போட்டியில் அணி அழுத்தத்தில் இருந்தபோது ராகுல் (34*) விளையாடிய விதமும், வென்ற விதம் தனித்துவமானது.
News March 10, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News March 10, 2025
அது சினிமா படப்பிடிப்பு: பிக்பாஸ் விக்ரமன் விளக்கம்

சென்னை அய்யப்பன்தாங்கலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், இளைஞருக்கு பெண் வேடமிட்டு வந்து ஒருவர் பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ வெளியாகியது. பின்னர், அது பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் என செய்திகள் வந்தன. இந்நிலையில், அது சினிமா படப்பிடிப்பு என்றும், அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விக்ரமன் எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்தார்.