News March 8, 2025

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 48.46 கோடி 

image

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட உலக மகளிர் நாள் விழாவில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடனுதவிகளை முதலமைச்சர் வழங்கினார். அந்நிகழ்ச்சியை மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேரலையில் கண்டு பின், மாவட்டத்தில் உள்ள 658 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 48.46 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளை வழங்கினார்.

Similar News

News September 22, 2025

பெரம்பலூர்: கூட்டுறவு சங்கங்களில் வேலை வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் கூட்டுறவு தேர்வுக்கான எழுத்துத் தேர்வு 11.10.2025 அன்று நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.drbpblr.net என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்துத் தேர்வு எழுதலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். SHARE IT NOW…

News September 22, 2025

பெரம்பலூர்: மின் மின்தடை அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2025) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை மின்தடை ஏற்படும் என துணை மின் செயற்பொறியாளர் அவர்கள் அறிவித்துள்ளார்.

News September 21, 2025

தீபாவளிக்கு அதிக கூடுதல் பேருந்து இயக்க மைச்சர் முடிவு

image

பெரம்பலூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான சா.சி.சிவசங்கர் அவர்களிடம் கேட்டபோது தீபாவளி பண்டிகைக்கு கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகளவில் பேருந்து வசதி இருக்குமென தெரிவித்துள்ளார். இதைப்பற்றி போக்குவரத்து துறை மேலாண்மை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தப்படும் என்பதையும் தெரிவித்தார்.

error: Content is protected !!