News March 8, 2025
இன்ஸ்டா Influencer ஆகணுமா? காலேஜில் இந்த கோர்ஸ் படிங்க!

சோஷியல் மீடியா யூகத்தில் பல Influencerகள் அதிக வருமானம் ஈட்டுகிறார்கள். இதனை வைத்து தற்போது காலேஜ் கோர்ஸும் வந்துவிட்டன. 3 வருட MBA கோர்ஸ், Indian School of Business *3 வருட BA & BBA கோர்ஸ், Symbiosis Centre for Media and Communication, புனே * 3 வருட Bachelor of Digital Strategy, ஜெய்ஹிந்த் காலேஜ், மும்பை போன்ற கல்லூரிகள் டாப் சாய்ஸாக இருக்கலாம். இதுக்கெல்லாமா படிக்கணும் என்ற கேள்வி வருகிறதா?
Similar News
News July 9, 2025
ஜூலை 9… வரலாற்றில் இன்று!

*1866 – பனகல் அரசர், சென்னை மாகாணத்தின் 2-ஆவது முதலமைச்சரானார். *1877 – முதலாவது விம்பிள்டன் போட்டிகள் ஆரம்பமாயின. *1930 – திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தரின் பிறந்த தினம் * 2006 – சைபீரியாவில் இர்கூத்ஸ்க் விமான நிலையத்தில் 200 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 125 பேர் உயிரிழந்தனர். *2011 – சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் தனி நாடானது.
News July 9, 2025
’அதிகாரிகள் மீது நடவடிக்கை’: அமைச்சர் சேகர் பாபு உறுதி

வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவில் புனித நீர் ஊற்ற செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், அமைச்சர் சேகர்பாபு தனது இல்லத்துக்கு வந்து தன்னை சந்தித்து வருத்தம் தெரிவித்ததாகவும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News July 9, 2025
’16 முறை சூரிய உதயம், அஸ்தமனத்தை பார்க்கிறோம்’

சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுபான்ஷுவுடன் மேகாலயா, அசாமை சேர்ந்த மாணவர்கள் கலந்துரையாடினர். அப்போது, விண்வெளியில் ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் பார்ப்பதாக சுபான்ஷு தெரிவித்தார். விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால், உடலில் தசைகளும், எலும்பும் பலவீனமாகிவிடும் என்பதால் தினமும் ட்ரெட்மில், சைக்கிளிங் மெஷனில் உடற்பயிற்சி செய்வதாகவும் கூறினார்.