News March 31, 2024

BREAKING: அடுத்தடுத்து தொடரும் மரணம்.. எச்சரிக்கை

image

கோவை வெள்ளியங்கிரி மலைக்கோவிலுக்கு சென்ற சென்னையை சேர்ந்த ரகுராமன் 5ஆவது மலையில் உள்ள சீதை வனம் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் 3 பேர் உள்பட ஒன்றரை மாதத்தில் மட்டும் மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் 6 பேர் மரணமடைந்துள்ளனர். வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் முறையாக உடல்பரிசோதனை செய்யவும். உடலில் சிறு பிரச்னைகள் இருந்தாலும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 8, 2025

தினமும் இந்த பழங்களை சாப்பிடலாம்

image

இந்தப் பழங்கள் வெறும் சுவையானவை மட்டுமல்ல, உங்கள் உடல் விரும்பும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளன. என்னென்ன பழங்கள், நம் அன்றாட ஆரோக்கியத்தில் பங்களிக்கின்றன என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. SHARE பண்ணுங்க. இவை தகவலுக்காக மட்டுமே. ஆலோசனை தேவைப்பட்டால் மருத்துவ நிபுணரை அணுகவும்.

News November 8, 2025

BREAKING: துரைமுருகன் விலகலா..?

image

திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக் குறைவு, வயது மூப்பு காரணமாக அவர் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது விலகலுக்கு பிறகு ஜெகத்ரட்சகனுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, மேலும் 2 பேரை துணை பொதுச்செயலாளராக்கவும் திமுக திட்டமிட்டு வருகிறதாம்.

News November 8, 2025

அதிரடி வீராங்கனை ரிச்சா கோஷுக்கு DSP பதவி

image

உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியில் சிறந்த பினிஷராக திகழ்ந்தவர் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ். மேற்கு வங்கத்தை சேர்ந்த அவருக்கு, அம்மாநில CM மம்தா பானர்ஜி தலைமையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பங்கா பூஷன் என்ற மாநில அரசின் உயரிய விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. அதேபோல் அவருக்கு டிஎஸ்பி பதவியும் வழங்கப்பட்டது. ஏற்கெனவே தீப்தி சர்மாவுக்கு டிஎஸ்பி பதவியை UP அரசு வழங்கியிருந்தது.

error: Content is protected !!