News March 8, 2025

18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா் 2/3

image

மினோகா, இனோகா என்ற 2 வேறு வகையான மாரடைப்பு பாதிப்பு இளம்பெண்களிடம் தற்போது அதிகரித்து வருகிறது. சா்க்கரை நோய், தவறான உணவுப் பழக்கம், உயா் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, மரபணு பாதிப்பு, மன அழுத்தம் ஆகியவைதான் முக்கிய காரணம். இதயத்துக்குச் செல்லும் குறுநாளங்களில் அடைப்பு ஏதும் இன்றி ரத்த ஓட்டம் தடைபடும். மிகவும் சிக்கலான இந்த நோய்களுக்கு 18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா்.

Similar News

News November 13, 2025

ராணிப்பேட்டை: ஆசிட் குடித்த இளம்பெண்!

image

ராணிப்பேட்டை: மகேந்திரவாடி கிராமம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் முரளி. இவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்த நிலையில் இன்று (நவ.12) வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதில் மனம் உடைந்த அவரது மனைவி சோனியா (25) ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

News November 13, 2025

ராணிப்பேட்டை காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையால் இரவு பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் முக்கிய சாலைகள் மற்றும் பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

News November 12, 2025

சமூக நல துறையின் செயல்பாடுகள் ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.12) தேதி சமூக நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மாவட்டம் முழுவதும் சமூக நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், நிலுவை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். கூட்டத்தில் சமூக நலன் அலுவலர் பால சரஸ்வதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!