News March 31, 2024

பாஜக நிர்வாகிக்கு நடைவண்டி சின்னம்!

image

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட கட்சி வாய்ப்பு அளிக்காததால் பாஜகவின் மதுரை மேற்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட செயற்குழு உறுப்பினரான வேதா என்பவர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் நடைவண்டி சின்னம் ஒதுக்கீடு செய்தார்.

Similar News

News April 16, 2025

சிவகாசியில் பள்ளி சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை

image

விருதுநகரை சேர்ந்த 15, 17 வயதுடைய பள்ளி மாணவர்கள் இருவரை விளம்பர பதாகைகள் அமைக்க பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி சாம் டேவிட் (25) என்பவர் சிவகாசியிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இருவருக்கும் குளிர்பானத்தில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து மயக்கமடைந்த இருவரையும் நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில்  சாம் டேவிட் மீது போக்ஸோ வழக்கு பதிந்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

News April 16, 2025

விருதுநகரில் 12 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இன்று நண்பகல் 12 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர்

News April 16, 2025

ராஜபாளையத்தில் பால் வியாபாரி கொலையா?

image

ராஜபாளையம் அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் பால் வியாபாரி சுப்பிரமணியன்(55). இவரது குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி மற்றும் மகளை சுப்பிரமணியன் கண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் சுப்பிரமணியன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் இவரது உடலை மயானத்துக்கு கொண்டு சென்ற போது அதில் ரத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!