News March 8, 2025

தனியார் உள்ளூர் சேனலில் ஆபாச படம்

image

தர்மபுரி மாவட்டத்தில் ஒளிபரப்பான தனியார் உள்ளூர் சேனல் ஒன்றில் நேற்று (மார்.7) ஆபாசப்படம் ஒளிபரப்பானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பொதுமக்கள் அரசு கேபிள் டிவி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். கேபிள் டிவி தாசில்தார் ராஜராஜன் கூறுகையில் , ”அந்த சேனல் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தது. உடனே ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. சேனல் உரிமையாளர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

Similar News

News September 22, 2025

தர்மபுரியில் நீரில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

image

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே காட்டனூரைச் சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு இரண்டரை வயதில் அம்ரிஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை அம்ரிஷ் உயிரிழந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

News September 22, 2025

தர்மபுரி: தொடங்கியது நவராத்திரி! எங்கெல்லாம் வழிபடலாம்…

image

நவராத்திரி என்பது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா. இந்த நாட்களில், அன்னை பராசக்தியின் பல்வேறு வடிவங்களை வழிபடுகின்றனர். பல வீடுகளில் ஒன்பது நாட்களும் கொலு வைத்து, மூன்று தேவிகளையும் வழிபடுகின்றனர். தைரியம், சக்தி பெற துர்க்கை வழிபாடும், செல்வம், வளம் பெற மகாலட்சுமி வழிபாடும், கல்வி, ஞானம், கலை பெற சரஸ்வதி வழிபாடும் செய்யப்படும். <<17789218>>தர்மபுரியில் உள்ள அம்மன் கோயில்களுக்கு<<>> சென்று வழிபடலாம்.ஷேர்

News September 22, 2025

தருமபுரியில் நவராத்திரிக்கு செல்ல வேண்டிய கோயில்கள்

image

தருமபுரியில் நவராத்திரிக்கு செல்ல வேண்டிய சில முக்கிய கோயில்கள்:
* தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனர் கோவில்
* தர்மபுரி கௌரி மாரியம்மன் கோவில்
* கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில்
* அக்கரைப்பட்டாளி அம்மன் கோவில்
* இருமத்தூர் கொல்லாபுரியம்மன் கோவில்
* குந்தி அம்மன் கோவில்
* அங்காளம்மன் கோயில்கள் (SHARE IT)

error: Content is protected !!