News March 31, 2024
3 முக்கிய தலைவர்கள் காங்கிரஸில் இருந்து விலகல்

அசாம் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் உட்பட 3 முக்கிய தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகிய அதேநாளில் பாஜகவில் இணைந்துள்ளனர். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலப் பொதுச்செயலாளர் மானாஷ் போரா, செயலாளர் கவுரவ் சோமானி, மாவட்ட தலைவர் அனுஜ் பார்காதாகி ஆகியோர் திடீரென கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இதில், மானாஷ், அனுஜ் ஆகிய இருவரும் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்களின் மகன்கள் ஆவர்.
Similar News
News August 14, 2025
சஞ்சு வேணும்… ஆனாலும் RRக்கு NO சொன்ன CSK!

சஞ்சு சாம்சனுக்கு பதில் CSK-வில் இருந்து ஜடேஜா, ருதுராஜ் அல்லது ஷிவம் துபேவை தருமாறு <<17395146>>ராஜஸ்தான் கேட்டதாக <<>>தகவல் வெளியானது. சஞ்சு சாம்சனை வாங்குவதில் CSK தீவிரமாக இருந்தாலும், தங்களது அணிக்கு தூண்களாக இருக்கும் மூவரில் ஒருவரை கூட விட்டுக்கொடுக்க விரும்பவில்லையாம். சென்னை ஒத்துவராத நிலையில் வேறு சில அணிகள் சஞ்சுவை வாங்க முயற்சித்து வருகின்றனவாம். சஞ்சு வேறு எந்த அணிக்கு போக வாய்ப்பிருக்கு?
News August 14, 2025
நடிகை மினு முனீரை கைது செய்த சென்னை போலீஸ்

பாலியல் புகாரில் கேரள நடிகை மினு முனீரை சென்னை போலீஸ் அதிரடியாக கைது செய்துள்ளது. 14 வயது சிறுமியை சின்னத்திரையில் நடிக்க வைப்பதாக சென்னைக்கு அழைத்து வந்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுதொடர்பான புகாரில் மினு முனீரை கைது செய்த போலீசார், கேரளாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வருகின்றனர். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு, முன்னணி நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறி அதிரவைத்தவர் இவர்.
News August 14, 2025
மக்களின் தியாகத்தை போற்றுவோம்: PM மோடி

பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து 1947 ஆக.14-ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. அப்போது நிகழ்ந்த வன்முறை, வெறுப்பு, துன்புறுத்தல்கள் காரணமாக பலர் உயிரிழந்தனர். அவர்களின் தியாகத்தை போற்றி இந்நாள் பிரிவினை கொடுமையின் நினைவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், மக்களின் போராட்டங்கள், தியாகங்களை நினைவுகூர்ந்து, தேச ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துவோம் என PM மோடி தெரிவித்துள்ளார்.