News March 7, 2025

பிரபல நடிகருக்கு கோவையில் உற்சாக வரவேற்பு

image

தமிழன் தொலைக்காட்சி மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்தும் மகளிர் தின சிறப்பு பட்டிமன்ற நிகழ்விற்காக கோவைக்கு இன்று வருகை புரிந்த திரைப்பட இயக்குநரும், நடிகருமான ஆர்.பாண்டியராஜனை கோவை விமான நிலையத்தில் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் உறுப்பினர் வெங்கடகிருஷ்ணன் பொன்னாடை போற்றி வரவேற்றார். அறக்கட்டளையின் நிறுவனர் எஸ்.ஏ.ஐ.நெல்சன் அவர்கள் உடன் இருந்தார்.

Similar News

News April 21, 2025

கோவை: சம்ஹாரீஸ்வர பைரவர் கோயில்

image

கோவை, ஆலாந்துறை, நாதேகவுண்டன்புதூரில், கால சம்ஹாரீஸ்வர பைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. 8 வாகனங்களில் 8 வகையான கால பைரவர்கள், சம்ஹார பைரவர்களாக இங்கு வீற்றிருக்கின்றனர். சக்திவாய்ந்த கால பைரவரை அஷ்டமி நாளான இன்று, 11 தீபங்கள் ஏற்றி, வணங்கினால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News April 21, 2025

கோவை: பவானி ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

image

திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் குமார்(25). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று தனது நண்பர்களுடன், கோவை மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார். பின்னர், மது போதையில் அருகில் உள்ள சிவன் கோவில் பவானி ஆற்றில் குளித்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், அவரால் நீந்தி கரைக்கு வர முடியாமல், நீரில் மூழ்கி உயிரிழந்தார். மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 21, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (20.4.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!