News March 7, 2025
நெல்லை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மார்ச்.11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. வரும் 10ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் IMD தெரிவித்துள்ளது. *மறக்காம ஷேர் பண்ணுங்க
Similar News
News August 24, 2025
நெல்லை: திருமணத் தடை நீக்கும் கோயில்

திருநெல்வேலி சந்திப்பு அருகே உள்ள சாலை குமாரசுவாமி திருக்கோவில், திருமணத் தடை உள்ளவர்கள் தரிசிக்க சிறந்த முருகன் திருத்தலமாகும். இங்கு மூலவர் ஆறுமுகத்துடன், பன்னிரு கைகளுடன் மயில்மேல் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். திருச்செந்தூர் கோவிலுக்கு இணையாக இங்கு பூஜைகள், விழாக்கள் அனைத்தும் அந்த ஸ்தல பாணியில் நடைபெறும். திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வருவது இக்கோயிலின் சிறப்பு* மறக்காம ஷேர் பண்ணுங்க
News August 24, 2025
நெல்லை மாவட்டத்தில் 3 மாதத்தில் 3 கொலைகள் தடுப்பு

நெல்லை மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் எல்லைகளில், சதித்திட்டத்துடன் திட்டமிடப்பட்ட இரண்டு கொலைகளை ஜூன் மாதம் காவல்துறை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்தது. இதற்காக தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் 19 போலீசாருக்கு விருது வழங்கினார். நேற்று களக்காடு அருகே 5 பேரை கைது செய்ததால் மற்றொரு கொலை தடுக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களில் நெல்லையில் 3 கொலை முயற்சிகள் தடுக்கப்பட்டன.
News August 24, 2025
நெல்லையில் இலவச வக்கீல் சேவை! SAVE பண்ணிக்கோங்க

நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாக சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️நெல்லை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0462-2572689 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. SHARE பண்ணுங்க.