News March 7, 2025
குமரியில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மார்ச் 11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆயவு மையம் கணித்துள்ளது. 10ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. SHARE IT.
Similar News
News November 17, 2025
குமரி: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்

குமரி மக்களே; இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News November 17, 2025
குமரி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

நாகர்கோவில், மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறவுள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கப்புரம், செட்டிக்குளம் சந்திப்பு, சர்குணவீதி, ராமன்புதூர், சவேரியார் கோவில் சந்திப்பு, சரலூர், வேதநகர் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. SHARE IT
News November 17, 2025
குமரி: நண்பர்களுடன் சேர்ந்து தாயை தாக்கிய மகன்

கொட்டில்பாடு காலனியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருபவர்கள் மரிய ஆரோக்கியம் – குளோரி தம்பதியர். இவர்கள் மகன் மரிய டைனிஷ்(35). நவ.15ல் குளோரி கடையில் இருந்தபோது, அங்கு 2 நண்பர்களுடன் வந்த மரியடைனிஷ், குளோரியிடம் பணம் கேட்டுள்ளார். குளோரி பணம் இல்லை என கூறியதால் 3 பேரும் சேர்ந்து குளோரியை தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குளச்சல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.


