News March 7, 2025
இந்தியாவை கௌரவித்த பார்படாஸ்.. மோடி நெகிழ்ச்சி…

பார்படாஸ் நாட்டின் சார்பில் ‘Honorary Order of Freedom of Barbados’ விருது பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதை அவரது சார்பில் இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பபித்ரா மர்கெரிட்டா பெற்றுக்கொண்டார். இதற்காக பார்படாஸ் அரசு மற்றும் மக்களுக்கு மோடி,தனது எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் நெருங்கிய உறவுக்கு இந்த விருதை சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 9, 2025
நான் அதை செய்தால் உக்ரைன் காலி: எலான் மஸ்க்

வெள்ளை மாளிகையில் ட்ரம்புடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்திருந்தார். தற்போது மீண்டும் மஸ்க், ஜெலன்ஸ்கியை வம்புக்கு இழுப்பது போல் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில்,எனது ஸ்டார்லிங்க் இன்டர்நெட்தான் உக்ரைன் ராணுவத்தின் முதுகெலும்பாக உள்ளது. அதை ஆப் செய்தால் உக்ரைனின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் காலியாகிவிடும் என பதிவிட்டுள்ளார்.
News March 9, 2025
சனி கவனிக்க போகும் 3 ராசிகள்!

சனி பகவான் ஏப்ரல் 28ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். இது, பல ராசிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தினாலும், ரிஷபம், சிம்மம், மேஷம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நன்மையை அள்ளிக் கொடுக்க போகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். தன்னம்பிக்கையும், அசாத்திய துணிச்சலும் அதிகரிக்கும். வருமானம் இரட்டிப்பாகும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
News March 9, 2025
எஸ்கேப் ஆயிட்டான் NZ

இந்தாண்டில் இதுவரை இந்திய அணி 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், இன்றைய போட்டி தவிர அனைத்திலுமே எதிரணியை ஆல்-அவுட் செய்து இந்திய அணி சாதனை நிகழ்த்தியுள்ளது. பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப், அக்ஷர், ஜடேஜா போன்ற பலம் வாய்ந்த பவுலர்களால் இது சாத்தியப்பட்டது. ஆனால், NZக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியா ஆல்-அவுட் செய்யத் தவறிவிட்டது. NZ 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது குறிப்பிடத்தக்கது.